கோமகன். கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, மே 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
324 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7447-00-1.
உலகத் திசைகளில் வாழும் இலங்கையின் தமிழ்மொழிச் சமூக ஆளுமைகள் 14பேருடன் கோமகன் நடத்திய இந்த நேர்காணல்களில் அரசியல், கலை, இலக்கியம், போராட்டம், பெண்ணியம், சாதியம், மதம் என வாழ்வை இடையீடு செய்யும் படிகளிடையே பல்வேறு திறப்புகள் நிகழ்கின்றன. யோ.கர்ணன் (இலங்கை), பொ.கருணாகரமூர்த்தி (ஜேர்மனி), அ.யேசுராசா (இலங்கை), லெ.முருகபூபதி (அவுஸ்திரேலியா), கருணாகரன் (இலங்கை), புஸ்பராணி சிதம்பரி (பிரான்ஸ்), சோ.பத்மநாதன் (இலங்கை), புலோலியூரான் (ஜேர்மனி), ஆர்.எம்.தீரன் நௌஷாத் (இலங்கை), இளவாலை விஜயேந்திரன் (நோர்வே), கேஷாயினி எட்மண்ட் (இலங்கை), நிவேதா உதயராயன் (பெரிய பிரித்தானியா), க.சட்டநாதன் (இலங்கை), சோலைக்கிளி (இலங்கை) ஆகியோரின் நேர்காணல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்புகளாக ஆதவன் தீட்சண்யாவின் பின்னுரை, எதிர்வினைகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.