17860 தேவதைகளுடன் நான்: 14 பெண்ஆளுமைகளின் நேர்காணல்கள்.

 க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

140 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 750., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6601-28-7.

இந்நூலில் தாமரைச்செல்வி, மலரன்னை, நெலோமி, சந்திரா தனபாலசிங்கம், கோகிலா மகேந்திரன், மண்டூர் அசோகா, மண்டைதீவு கலைச்செல்வி, வெற்றிச்செல்வி, தமிழ்கவி, ஆதிலட்சுமி சிவகுமார், வள்ளியம்மை சுப்பிரமணியம், எஸ்.பஞ்சகல்யாணி, தமிழ்நதி, இராஜினிதேவி சிவலிங்கம் ஆகிய இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இவை ஜீவநதி இதழில் (இதழ் இலக்கம் 112 முதல் 243 வரை) அவ்வப்போது வெளிவந்துள்ளன. இந்நேர்காணல்களை ‘ஜீவநதி’ ஆசிரியர் க.பரணீதரன் மேற்கொண்டுள்ளார். இவர் ஏற்கெனவே ‘ஜீவநதி நேர்காணல்கள்’, ‘இவர்களுடன் நான்’ ஆகிய நேர்காணல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 400ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

15678 உண்டியல்: சிறுகதைத் தொகுதி.

தர்காநகர் சுலைமா சமி இக்பால். மாவனல்ல: எக்மி பதிப்பகம், 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, 1வது பதிப்பு, ஜுன் 2018. (மாவனல்ல: பாஸ்ட் கிராப்பிக்ஸ், ஹஸன் மாவத்தை). xxiv, 127 பக்கம், விலை: ரூபா