க.பாலேந்திரா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
168 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-90-1.
இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 268ஆவது நூலாக வெளிவந்துள்ளது. புலம்பெயர்ந்து கடந்த முப்பது ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்துவரும் பாலேந்திரா 1973 முதல் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் 10ஆண்டுகள் நவீன நாடகங்களைத் தயாரித்துள்ளார். அவர் இயக்கிய டென்னஸி வில்லியம்ஸின் ‘கண்ணாடி வார்ப்புகள்’, பிரமிளின் ‘நட்சத்திரவாசி’, லொர்காவின் ‘ஒரு பாலை வீடு’ ஆகிய நாடகங்கள் தமிழின் முக்கிய நாடகங்களாகும். மேலும் ‘கவிதை நிகழ்வு’ எனும் புதிய கலை வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். க.பாலேந்திரா அவ்வப்போது ஊடகங்களுக்கு வழங்கிய தன் அனுபவம்சார்ந்த நேர்காணல்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.