கந்தையா சிவஞானம் பிரபாகரன். திருக்கோணமலை: சைவப்புலவர், பண்டிதர், கலாபூஷணம் சரோஜினிதேவி சிவஞானம் அறக்கட்டளை, இல. 42 B/1, தேன்தமிழ் வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
176 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-624-97668-9-1.
இந்நூலில் ஆசிரியர் அமரர் பிரபாகரன் தனது ஐம்பதாண்டு கால வாழ்க்கையில் எழுதியிருந்த தேர்ந்த சிறுகதைகள் (தெய்வீகக் காதல், மாறிய பாதையின் வழிகாட்டி, அழியாத கோலங்கள்), மேடையேற்றங்களில் வெற்றிபெற்ற நாடகங்கள் (இனி ஒரு விதி செய்வோம், எல்லாஞ் சரிவரும், மானிடமே விழித்தெழு, அக்கினிப் பெருமூச்சு, கெடுவான் கேடு விளைவிப்பான், ஆத்மராகம், சிவவதம்), தேர்ந்த சில கவிதைகள் (பிறந்த தின கவிமாலை, விலைமாது, கண்ணீர், காகிதம், வேணுகானம், இரண்டு மண், வதனங்கள் காண்போம் வாருங்கள், கவிப்பெருக்கு, நெஞ்சு பொறுக்குதில்லையே, கோணேசர் பள்ளு) ஆகியவை வகுத்துத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கணித ஆசானாக மட்டுமிராது, ஏனைய பொருளாதார நிலைகளில் பின்தங்கிய பல மாணவர்களுக்கு கல்விக்காக மாதாந்தம் தனது சொந்தப் பணத்தினையும் வழங்கி பல்கலைக்கழகம் வரை பயிலவைத்து மகிழ்ந்தவர் அமரர் க.சி.பிரபாகரன். அவர் உருவாக்கிய ‘குருஷேஸ்திரா’ கல்வி நிலையத்தின் மூலமாக சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக திருக்கோணமலை மாவட்ட மாணவர்களுக்கு கல்வி அறிவுடன், கலை கலாசார, உலக அறிவையும் ஊட்டி வளர்த்தவர்.