மைதிலி விசாகரூபன், யோகராஜா கேசவன், கனகரத்தினம் சயந்தன், திருநாவுக்கரசு கமலநாதன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் அலகு, கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: மிக்கி பிரின்டிங் ஸ்பெஷலிஸ்ட், தபாற்பெட்டிச் சந்தி, பலாலி வீதி, திருநெல்வேலி).
xii, 244 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-955-5334-92-1.
பேராசிரியர் கலாநிதி சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்களின் சிந்தனைகள், கருத்துக்கள் என்பன 1950களில் தொடங்கி, அவர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பதவி வகித்த நீண்ட காலப்பகுதிக்குள் ஆங்காங்கே ஊடகங்களில் வெளிவந்திருந்தன. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மன்ற இதழான ‘இளங்கதிரி’ லும் பாடசாலைச் சஞ்சிகைகளிலும், தினகரன், வீரகேசரி, சுதந்திரன் முதலான நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் பேராசிரியரின் எழுத்துக்கள் பலவும் கணிசமாக வெளிவந்துள்ளன. 1940, 1950களில் வெளிவந்த அவரது சிந்தனைகள் பலவும் இன்றும் பொருந்துவனவாகக் காணமுடிகின்றது. இத்தொகுப்பில் அத்தகைய எழுபது ஆக்கங்கள் திரட்டப்பெற்று ஒரு நூலாக அவரது பிறந்த நாள் நூற்றாண்டு நினைவாக வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் வெளிவந்த ஆண்டு ஒழுங்கில் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.