இ.தனஞ்சயன் (தொகுப்பாசிரியர்), எஸ்.சிவலிங்கராஜா, சோ.பத்மநாதன், ந.குகபரன் (பதிப்பாசிரியர்கள்), யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழியற் கழகம், 1வது பதிப்பு, 2023. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).
xxiv, 424 பக்கம், விலை: ரூபா 2500., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-6211-04-2.
முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி அவர்கள் பற்றிய படைப்புக்கள், முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி அவர்கள் பற்றிய பதிவுகள், முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி அவர்கள் இயற்றியனவும் அவர் பற்றியனவுமான நூல்கள், முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி அவர்களின் குடும்பம், முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி வம்சவரிசைஆகிய பிரிவுகளின்கீழ் இந்நூல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. பண்டிதர் மு. நல்லதம்பி (13 செப்டம்பர் 1896 – 8 மே 1951), இலங்கையில் அறியப்பட்ட ஒரு தமிழ் அறிஞரும் புலவருமாவார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களையும் பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார். இலங்கையின் தேசியகீதத்தை 1950ம் ஆண்டு தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்தவர் இவர். இவரால் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த மொழிபெயர்ப்பு இலங்கையில் தமிழ் பேசும் பிரதேசங்களில் பாடப்படுகின்றது. சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பல பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.