17866 முற்றுப்பெறாத விவாதங்கள் (நேர்காணல்கள்).

எம்.ஏ.நுஃமான். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.B.தாசன் வீதி, தேனாம்பேட்டை).

200 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-19034-53-6.

இது கடந்த சுமார் முப்பது ஆண்டுகால இடைவெளியில் பல்வேறு சஞ்சிகைகளில் அவ்வப்போது வெளிவந்த 14 நேர்காணல்களின் தொகுப்பு. இந்நூலிலுள்ள நேர்காணல்கள், சிரித்திரன், அலை, மூன்றாவது மனிதன், வியூகம், ஞானம், கலையமுதம், தினக்குரல், மீள்பார்வை, வழித்தடம் முதலிய ஈழத்து இதழ்களிலும், காலச்சுவடு, மணற்கேணி ஆகிய தமிழக இதழ்களிலும், லண்டனிலிருந்து வெளிவந்த நாழிகை, மலேசியாவிலிருந்து வெளிவரும் வல்லினம், கனடாவிலிருந்து வெளிவரும் இலக்கிய வெளி ஆகிய இதழ்களிலும் வெளிவந்தவை. இங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விகள் பெரும்பாலும்; சமூகம், இலக்கியம், அரசியல், மொழி சார்ந்தவையாக உள்ளன. விவாதங்கள் என்றுமே முற்றுப்பெறுவதில்லை. எனவே இந்நூலின் தலைப்பும் அக்கருத்தையே பிரதிபலிக்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72584).

ஏனைய பதிவுகள்