சோ.சிவபாதசுந்தரம். சென்னை 17: வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், 2வது பதிப்பு, 1984, 1வது பதிப்பு, 1947. (சென்னை 5: ஸ்ரீ கோமதி அச்சகம், இல. 7, சின்னப்பா ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி).
xii, 164 பக்கம், விலை: இந்திய ரூபா 10.00, அளவு: 18×12.5 சமீ.
கௌதம புத்தர் அடிச்சுவட்டில் (1960), சேக்கிழார் அடிச்சுவட்டில் (1978) ஆகிய திருத்தல யாத்திரை நூல்களை எமக்களித்த சோ.சிவபாதசுந்தரம் அவர்களின் மற்றுமொரு நூல் இது. மாணிக்கவாசகர் சரித்திரத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ள சைவத் திருத்தலங்கள் பதின்மூன்று. அந்தச் சமய குரவரின் யாத்திரையில் பாதம் பதித்திருந்த 13 புனித தலங்களையும் ஆசிரியர் தரிசித்து அதனை ஒரு பிரயாண நூலாக- புனித யாத்திரையின் சுவையான பதிவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. திருவாதவூரடிகள் புராணத்திலும் திருவிளையாடற் புராணத்திலும் காணப்பட்ட கதைகளை ஆதாரமாகக் கொண்டு யாத்திரைச் சுவைக்கும் கற்பனை அழகிற்கும் இடம் தரக்கூடிய முறையில் இச்ந்நூல் 1947இலேயே எழுதப்பட்டுள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அதன் மீள் பதிப்பு இதுவாகும்.