விஜித்தா கனகரட்ணம், சஞ்சயன். சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 9, பிளாட் எண்: 1080யு, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 9, பிளாட் எண்: 1080A, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு).
xxvi, 115 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-82-303-5945-7.
இந்த நூல் புற்றுநோய் என்ற பெருநோயிலிருந்து மீண்ட ஒரு பெண்ணின் அனுபவங்களாக விரிகின்றது. திருமதி விஜித்தா கனகரட்ணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் அரியாலைக் கிராமத்தில் 1969ஆம் ஆண்டு பிறந்தவர். 1994இல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து திருமணமாகி இரு பிள்ளைகளின் அன்னயானவர். நோர்வேக்கு பலம்பெயர்ந்தபின், சுகாதாரத் துறையில் முதுமக்களைப் பராமரிக்கும் துறையில் தேர்ச்சிபெற்று முதுமக்கள் மனையொன்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர். தனது 51ஆவது வயதில் புற்றுநோயின் தாக்கத்துக்கு உள்ளாகி மீண்ட அவர் தனது வாழ்வனுபவங்களை இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.