17872 நமது வரலாற்று ஆளுமைகள்: பாகம் 01.

ஸக்கியா ஸித்தீக் பரீட். தெகிவளை: ரஹ்மதுல்லாஹ் பதிப்பகம், 1வது பதிப்பு, மே 2022. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ், 30/7, 5ஆவது ஒழுங்கை, அம்பகஹபுர).

568 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 21×15 சமீ.

கடந்தகால இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அயராது உழைத்த ஆளுமைகள் 142 பேரின் சமூகப் பங்களிப்பைப் பற்றிப் பேசும் நூல். சமூக நிர்மாணிகள், புத்திஜீவிகளும் ஆய்வறிவாளர்களும், கல்விப் பணி புரிந்தோர், சன்மார்க்க ஆலிம்கள், அரசியல் தலைவர்களும் பங்களிப்பும், உழைப்பால் உயர்ந்த சேவைச் செம்மல்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், கலை இலக்கியம் இசைத்துறையாளர்கள் என பத்து அத்தியாயங்களில் இவ்வாளுமைகள் வகுக்கப்பட்டு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71441).

ஏனைய பதிவுகள்

12394 சிந்தனை: தொகுதி I இதழ் 2 (சித்திரை 1976).

அ.சண்முகதாஸ் (இதழாசிரியர்), ஆ.சிவநேசச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மனிதப் பண்பியற் பீடம், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி). (6), 75