இராசி. ஜெயபதி. சென்னை 4: கலைமகள் பப்ளிகேஷன்ஸ், 34/2, வீரபத்ரன் தெரு, மயிலாப்பூர், 1வது பதிப்பு, மே 2023. (சென்னை 14: ரத்னா ஆப்செட்).
xiv, 118 பக்கம், புகைப்படம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-951499-5-7.
தாய்நாட்டு விடுதலையில் ஆரம்பித்துப் பின் ஆன்மீக விடுதலை தேடிய ஸ்ரீ அரவிந்தர், இலங்கை மக்கள் மனதில் என்றும் நிற்கும் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி, காந்தியால் ஈர்க்கப்பட்ட இலங்கை இளைஞர்கள் இருவர், தமிழ் தந்த பதிப்பாசிரியர் சி.வை.தாமோதரம்பிள்ளை, சி.வை.தாமோதரம்பிள்ளைக்கு ஏற்பட்ட தடைகளும் முட்டுக்கட்டைகளும், யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரி மற்றும் பழைய பூங்காவை (Old Park) உருவாக்கித் தந்த அரச அதிபர் டைக் (Dyke), பகவத் கீதையால் மிகவும் கவரப்பட்ட அணுகுண்டின் தந்தை ஓப்பன் ஹைமர், தடைகள் பல தாண்டி மிளிர்ந்த தாகூரின் கீதாஞ்சலி, கல்வி, சமயம், பண்பாடு மூலம் வடக்கு கிழக்கு இலங்கையரை இணைத்த சுவாமி விபுலானந்தர், யாழ் நூல் தந்த ஞானியின் கடைசி நாட்கள்- அறிஞர்கள் போற்றும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர், வட இலங்கை வந்த முதல் அமெரிக்க மிஷன் வைத்தியரும் மற்றவர்களும், ஆங்கில இலக்கியவாதி லெனாட் வூல்ப் (Leonard Woolf) நினைவுகளும் அவர்தம் யாழ்ப்பாண அனுபவங்களும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 13 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறைப் பட்டதாரியான இராசி. ஜெயபதி (சின்னத்துரை ஜெயபதி) இலங்கை விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றியவர். தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருகின்றார்.