சித்தார்த்தினி ஜெயதேவன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
x, 162 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-92-8.
ஈழத்தின் சமகால தமிழ் நூலகத்துறையில் அகற்ற முடியாத ஓர் அம்சமாகத் திகழ்பவர் நூலகவியலாளர் என்.செல்வராஜா. இவரது நூல்களில் இடம்பெற்ற பல்துறை அறிஞர்களின் அணிந்துரைகளின் தொகுப்பினை இந்நூல் கொண்டுள்ளது. நூலொன்றிற்கு அணிந்துரை எழுதுபவருக்கும், அந்நூலை ஆக்கியவருக்கும் இடையேயான தொடர்புகள், நூலொன்றை எழுதுவதற்கான அவரது தகைமைகள், பின்புலங்கள், நூல் தொடர்பில் அவரது உழைப்பு போன்றவற்றுடன், நூல்சார்ந்த குறித்த துறைக்குள் அந்நூலினால் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகிய விடயங்களை உள்வாங்கியே ஆழமான அணிந்துரையொன்று எழுதப்படுகின்றது. இத்தொகுப்பிலுள்ள அணிந்துரைகள் துறைசார் அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன. இவ்வணிந்துரைகள் நூலின் ஆழ அகலங்களைப் பேசுவதுடன் நூலியலாளர் என்.செல்வராஜா அவர்களின் வாழ்வியலையும் பணிகளையும் ஆவணப்படுத்துகின்றன. பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் சி.மௌனகுரு, பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம், ஊடகவியலாளர் த.ஜெயபாலன், கலாநிதி தி.செல்வமனோகரன், எழுத்தாளர் கவிஞர் முல்லை அமுதன், பேராசிரியர் கா.குகபாலன், சர்வோதய இணைப்பாளர் பொ.ஜமுனாதேவி, ஒலிபரப்பாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான பீ.எச்.அப்துல் ஹமீத், முன்னாள் பிரதியமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஒலி-ஒளிபரப்பாளர், ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜென், அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை, சிக்காகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் சாஷா எப்லிங், கவிஞர் மாதவி சிவலீலன், கலாநிதி க.ஹரிகிருஷ்ணன், மலேசிய மூத்த படைப்பாளி சை.பீர் முஹம்மது, பேராசிரியர் செ.யோகராஜா, ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம், டென்மார்க் தமிழ் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன், கலாநிதி சிவ-தியாகராஜா, பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன், தமிழறிஞர் ஐ.தி.சம்பந்தர், முனைவர் வி.ரி.அரசு, ஊடகவியலாளர் அருண்மொழிவர்மன், திரு. கணபதி சர்வானந்தா, மூத்த எழுத்தாளர் லெ.முருகபூபதி ஆகியோர் நூலியலாளர் என்.செல்வராஜாவின் பல்வேறு நூல்களுக்கு வழங்கிய அணிந்துரைகளும் திறனாய்வுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.