வி.என்.மதிஅழகன். கொழும்பு 4: வி.என்.மதிஅழகன், 28, இரம்யா வீதி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (சென்னை 600 008 காந்தளகம், 2B, மெர்க்குரி அடுக்ககம், 65, பாந்தியன் சாலை, எழும்பூர்).
431 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ., ISBN: 978-624-99669-1-8.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் தமிழ்ப்பிரிவு பணிப்பாளராகவும் ஒலி, ஒளி செய்தி வாசிப்பாளர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு தரங்களிலும் கடமையாற்றி ஓய்வுபெற்ற வி.என்.மதி அழகனின் ஐம்பதாண்டு கால ஊடகத்துறை வாழ்வும் அவர் மேற்கொண்ட அரிய பணிகளும் பற்றி அவரை அறிந்த பலரின் வாழ்த்துரைகளாகவும், வாக்குமூலங்களாகவும் இப் பொன்விழா மலர் அமைகின்றது. மேலதிகமாக இடைக்கிடையே மதியழகன் எழுதிய சில ஆக்கங்களும் இணைக்கப்பட்டுள்ளன.