கணேசலிங்கம் குமரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 900., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-95-9.
‘இலங்கைத் தமிழ்நூல் வரலாற்றில் மிக முக்கிய முதல்நிலை ஆளுமையாகத் திகழ்பவர் திரு. என்.செல்வராஜா அவர்கள். அவர் ஈழத்துத் தமிழ் நூல் உலகின் அனைத்து கட்டங்கிலும் சம்பந்தப்பட்டவர். அவை தொடர்பான ஆழ்ந்த அறிவினைக் கொண்டவர். அவற்றின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களை கொண்டவர். இவை தொடர்பாக ஏனையோரையும் உற்சாகப்படுத்துபவர். இலங்கைத் தமிழ் நூல் சூழலில் இத்தகைய ஆளுமையுடைய வேறு எவரும் அண்மைக் காலங்களில் இருந்ததில்லை. தாய்நாட்டில் இருந்த போதும், புலம்பெயர்ந்த பின்னரும் இலங்கைத் தமிழரின் ஆவணங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் முயற்சியில் கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் இப் பேராற்றல் மிக்க ஆளுமையின் 70ஆவது அகவைப் பூர்த்தியைச் சிறப்பிக்கும் நோக்கில் இத்தொகுப்பு நூல் வெளிவருகின்றது. அவர் ஈழத்து நூல் உலகுக்கு வழங்கிய சேவையினை நினைவு கூர்ந்தும், நயந்தும் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பினை வெளியிடுவதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்’ (க.குமரன், பதிப்புரை).