17878 தம்பிஐயா தேவதாசின் படைப்புலகம்.

என்.செல்வராஜா. பிரித்தானியா: அயோத்தி நூலக சேவைகள் ஆனைக்கோட்டை-பிரித்தானிய கிளை, இணை வெளியீடு, அல்வாய்: ஜீவநதி கலைஅகம், 1வது பதிப்பு, 2024. (அல்வாய்: பரணி அச்சகம், நெல்லியடி).

28 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-955-0958-62-7.

தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் எம்மிடையே வாழும் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம். குறிப்பாக ஈழத்துத் தமிழ் சிங்களத் திரைப்படத்துறை சார்ந்த ஏராளமான ஆவணங்களையும், ஒளிப்படங்களையும் பேணிப் பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு பெட்டகம் அவர் என்றால் அத மிகையாகாது. இலங்கை வானொலியின் தமிழ்ப் பிரிவின் களஞ்சியத்திலிருந்த பல ஆவணங்கள், குறிப்பாக அங்கிருந்த நாடக எழுத்துப் பிரதிகள், ஈழத்துத் திரைப்பட ஒலிநாடாக்கள் என ஏராளமான முதுசொங்கள் படிப்படியாக அழிந்துவிட்ட நிலையில் இத்தகைய தனிமனித ஆவணக்காப்பாளர்களின் தோள்களிலேயே எமது சமூகம் தன் இனத்துக்கான வரலாற்றை பேணிப்பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றி வைத்துவிட்டு தமது கடமைகளை செய்துவிட்டதாக திருப்திப்பட்டுக்கொள்கின்றது. தனிமனித ஆவணக்காப்பாளர்கள் பலரின் மறைவின் பின்னர் அவர்களது அரிய சேகரிப்புகளும் சிதறுண்டு படிப்படியாக காணாமலாக்கப்பட்டு விடுகின்றன. தனிமனிதனாகச் செயற்படும் தம்பிஐயா தேவதாஸ் அவர்களின் அரிய சேகரிப்புகள் எதிர்காலத்தில் நூலகம் நிறுவனம் போன்ற அமைப்புக்களால் மின்வருடல் செய்யப்பட்டு பேணப்படவேண்டும். திரு தம்பிஐயா தேவதாஸ், யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 24.04.1951 இல் பிறந்த இவர்,யாழ்ப்பாணம் புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா மகாவித்தியாலயம், கொழும்பு அலெக்சான்ட்ரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல், தமிழ், இந்து கலாச்சாரம் ஆகிய பாடங்களைப் பயின்று பட்டம் பெற்றவர். பின்னர் மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்