17880 நடராஜா செல்வராஜா வாய்மொழி வரலாறு.

கனோல்ட் டெல்சன் பத்திநாதர் (நேர்காணல்), தில்லைநாதன் கோபிநாத், (தொகுப்பாசிரியர்). கலாமணி பரணீதரன் (பதிப்பாசிரியர்). அல்வாய்: ஜீவநதி கலைஅகம், 1வது பதிப்பு, மாசி 2024. (அல்வாய்: பரணி அச்சகம், நெல்லியடி).

52 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-955-0958-51-1.

நடராஜா செல்வராஜா (பி.1954 ஒக்டோபர் 20) ஈழத்தின் குறிப்பிடத்தக்க நூலகர்களில் ஒருவர். 1978 முதல் நூலகப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். ‘நூல்தேட்டம்’ தொகுப்புகளின் மூலம் ஈழத்து நூல்களைத் தொடர்ச்சியாகப் பட்டியலாக்கி ஆவணப்படுத்தி வருபவர். நூலகவியல், நூலகர்கள், எழுத்தாளர்கள், இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறு நூல்களை எழுதியும் தொகுத்தும் ஆவணப்படுத்தி வருபவர். அயோத்தி நூலக சேவைகள் நிறுவனம், ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகம் மற்றும் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றை நிறுவிப் பணியாற்றி வருபவர். பல்வேறு நூலகங்களின் ஆலோசகராகப் பங்களிப்பதுடன் 2006 முதல் Books Abroad (Scotland) நிறுவனத்தின் மூலம் இலட்சக் கணக்கான ஆங்கில நூல்களை இலங்கை முழுவதும் உள்ள பல்வேறு நூலகங்களுக்குக் கிடைக்கச் செய்துவருகிறார். 2018இல் நூலகம் நிறுவனத்தால் பதிவுசெய்யப்பட்ட என்.செல்வராஜாவின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு அந்த ஆண்டு வரையான தகவல்களை மட்டுமே கொண்டுள்ளது என்பதுடன் இயல்பான வாய்மொழிப் பதிவு என்ற வகையில் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளில் ஏற்படும் விடுபடல்கள் போன்றவையும் இருக்கலாம். குறித்த வாய்மொழி வரலாற்றின் ஆவண முக்கியத்துவம் கருதி எழுத்துரவாக்கப்பட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் வாய்மொழி வரலாறுகள் தொடரில் இரண்டாவது பிரசுரமாக வெளிவந்துள்ளது).

ஏனைய பதிவுகள்