மலர் வெளியீட்டுக் குழு. நயினாதீவு: தொண்டர் சபை, அருள் ஒளி நிலையம், 2ஆவது பதிப்பு, மாசி 2024, 1வது பதிப்பு, தை 2002. (யாழ்ப்பாணம்: சென்ரெக், பலாலி வீதி, கோண்டாவில் கிழக்கு).
viii, 125 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ.
நயினை சித்தர் தவத்திரு முத்துக்குமார சுவாமிகளின் 75ஆவது ஆண்டு சமாதி நிறைவு குருபூசைத் தின வெளியீடாக 07.02.2024 அன்று வெளியிடப்பட்டுள்ள நூல் இது. இந்நூல் கு.பாலசண்முகன் அவர்களின் முகவுரையுடன் ‘என் நினைவுகளில் சுவாமிகள்’ என்ற சி.பத்மநாதன் அவர்களின் உரையையும் ஆரம்பப் பக்கங்களில் உள்ளடக்குகின்றது. தொடர்ந்து ஆத்மஜோதி நா. முத்தையா, தவத்திரு வடிவேற் சுவாமிகள், டாக்டர் மா.வேதநாதன், ஆ.தியாகராசா, பண்டிதர் நா.விசுவலிங்கம், வி.ஆர்.கே.இரத்தினசபாபதி, திருமதி கமலாம்பிகை பாலசிங்கம், திருமதி மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம், நடா.சச்சிதானந்தன், சோ.பரமசாமி (நம்பி), உ.கந்தசுவாமி, இ.இராஜராஜேஸ்வரன், செல்வி பா.திக்கம் செல்லையாபிள்ளை, செல்லப்பா நடராசா, கந்தையா சொர்ணலிங்கம், அ.விஸ்வநாதன், திருமதி தம்பிஐயா சிவமணி ஆகியோரின் பார்வையில் நயினை சித்தர் தவத்திரு முத்துக்குமார சுவாமிகள் பற்றிய ஆக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இறுதியாக சுவாமிகளின் திருப்பாடல்களும், சித்தர்களின் திருவுருவங்களும் இணைக்கப்பட்டுள்ளன.