மலர்க் குழு. சாய்ந்தமருது: அகமது துரை நலன்புரி மன்றம், 1வது பதிப்பு, ஜனவரி 2024. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
(6), 116 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.
கிழக்கிலங்கையின் சாய்ந்தமருது மண்ணில் பேரோடும் புகழோடும் வாழ்ந்த சேவகனார் பரம்பரையில் நான்காம் தலைமுறையில் பிறந்த அஹமது துரை அவர்களின் வாழ்க்கை பற்றி, அவரது குணாம்சங்கள் பற்றி, அவர் ஆற்றிய சேவைகள் பற்றிய தகவல்களுடன் அவரது துணைவியார் மரியம் நாச்சி பற்றிய தகவல்களையும், ஐந்தாம் தலைமுறையில் புலம்பெயர்ந்து பன்னாடுகளிலும் வாழும் அவரது வம்சத்தினரைப் பற்றியுமான ஒரு ஆவணப்பதிவாக உருவாக்கப்பட்ட சிறப்பு மலர் இது. இம்மலரின் தொகுப்புக் குழுவில், பத்ஹதுல் அல்மா அஹமத் காதர் மொஹிதீன், ஜிஃப்ரித் அஹமத் ஆதம்பாவா, எம்.ஏ.அப்துல் ஹமீத், எம்.வை. ஆதம் பாவா, ஏ.எல். நப்ரிஸ் அஹமட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பெரும்பாலும் அஹமது துரை அவர்களின் குடும்பத்தினரின் படைப்பாக்கங்களே இடம்பெற்றுள்ளன.