இ.க.கந்தசாமி. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு 6: டெக்னோ அச்சகம், 581, 2/1 காலி வீதி, வெள்ளவத்தை).
(16) பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
தமிழறிஞர் பொ.சங்கரப்பிள்ளை மாவிட்டபுரத்தில் 1913 நவம்பர் 29அன்று பிறந்தார். சைவப் பெரியார் புலோலி சு.சிவபாதசுந்தரனார் அதிபராகவிருந்த காலகட்டத்தில் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் அரசு சேவையிலும் அரசின் சொல்லாக்கத் துறையிலும் பணி புரிந்தார். வித்தியோதய பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். 1950ஆம் ஆண்டில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுள் உறுப்பினரானார். 1975இல் இச்சங்கத்தின் பொதுச் செயலாளராகி சங்க அபிவிருத்தியின் நிமித்தம் பல்துறைப் பணிகளிலும் ஈடுபட்டார். 1981-1983 காலகட்டத்தில் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். சிறந்த தமிழறிஞராக மாத்திரமன்றி சிறந்த ஆராய்ச்சி அறிஞராகவும் இருந்து நாம் தமிழர், சைவ சித்தாந்தம், கல்யாணப் பொருத்தம், மரணத்தின் பின், பொருளாதாரப் பெறுமதிக் கோட்பாடுஆகிய ஐந்து நூல்களை எமக்கு வழங்கினார். இதில் ‘நாம் தமிழர்’ கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்தது. இப்பேரறிஞரின் 88ஆவது பிறந்த நாளை மன்னிட்டு இச்சிறு மலர் வெளியிடப்பட்டுள்ளது.