த.சண்முகநாதன். யாழ்ப்பாணம்: பழைய மாணவர் சங்கம், ஸ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரி, புத்தூர், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி).
xiv, 180 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ.
தனது ஊரில் கோவில், பாடசாலை, அன்னசத்திரம் ஆகிய மூன்று நிறுவனங்களை அமைத்து அவற்றின் தொடர் செயற்பாடுகளுக்கென தனது பெருஞ்சொத்துக்களை வழங்கிச் சென்ற வள்ளல் புத்தூர் மழவராயர் கந்தையா (23.08.1887-15.05.1936) அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றிப் பதிவு செய்யும் ஆவணம் இது. ஒன்பது இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ‘அறிமுகம்’ (அ.மழவராயர் கந்தையனார் பணிகள், விடயப் பிரதேசம், காலப் பின்னணி), ‘பாரம்பரியமும் வள்ளன்மையும்’ (பாரம்பரியம் என்றால் என்ன?, வள்ளன்மை என்றால் என்ன?), ‘மழவ கந்தையனார் வாழ்வும் வளமும்’ (மழவ கந்தையனார் குடும்பப் பின்னணி, பிறப்பும் இளமையும், தந்தையாருக்கு உதவுதல், கிராமிய விவசாயமும் புகையிலை வர்த்தகமும், சொத்துச் சேர்த்தல், மழவராயர் இறப்பும் கந்தையனார் முதன்மை பெறலும்), ‘மழவ கந்தையனார் பணிகள்’ (கோவில் அமைத்தல், கல்லூரி அமைத்தல், அன்னசத்திரம் அமைத்தல்),’பிற பணிகள்’, ‘மழவ கந்தையனார் தர்மசாதனங்களும் அவற்றின் முக்கியத்துவமும் நிறுவனங்களின் இன்றைய நிலையும்’, ‘மழவ கந்தையனார் பரம்பரையின் அறப்பணிகள்’ (திருமதி சிதம்பரம் சிற்றம்பலம், திருமதி சின்னத்தங்கச்சி குமாரசாமி, திருமதி வள்ளிப்பிள்ளை கந்தையா, திரு. சிவசம்பு சிற்றம்பலம், ஏனையோர்), ‘குலமுறைத் திருமணங்கள்’, ‘மழவ கந்தையனார் ஓர் மதிப்பீடு’ (புத்தூர் மழவராய முதலியார் வம்சாவழி) ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.