மு.நித்தியானந்தன். விழுப்புரம் 605602: மணற்கேணி வெளியீடு, எண் 56, பிளாட் எண் 6F -கீழ்த்தளம், அரவிந்தர் நகர், கிழக்கு பாண்டி ரோடு, 1வது பதிப்பு ஏப்ரல் 2023. (சென்னை 600087: அபிசான் என்டர்பிரைசஸ்).
164 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 22×14 சமீ., ISBN: 978-93-94698-57-4.
லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் அறிஞர் மு.நித்தியானந்தன் எழுதிய 18 அரசியல், கல்வியியல், கலை, இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பு இது. பேராசிரியர் சோ.சந்திரசேகரம்: கல்வியுலகின் ஒளிவிளக்கு, மலையகத்தின் கல்விச் சிற்பி ‘பாரதி’ ராமசாமி, கார்மேகம்: மலையகத் தமிழர் விரோத அரசியலின் சிருஷ்டி, ஐம்பதாயிரம் பிரதிகளில் வெளியான நடேசையரின் நூல், பெ.சந்திரசேகரன்: மலையக அடையாள அரசியலின் தனிநாயகன், மாத்தளையின் ஜீவநதி: கார்த்திகேசு, மாத்தளை வடிவேலன்: மலையக இலக்கியத்தின் எரிநட்சத்திரம், அமரர் சி.ஆறுமுகம்: பதுளையின் முதல் கல்வி முன்னோடி, லெனின் மதிவானம்: ஊற்றின் ஓட்டம் வற்றி நின்ற துயர், சித்தரமிர்தம்: சில குறிப்புகள், ஜுலியா மார்கரெட் கமெரூன்: பொகவந்தலாவையில் துயிலும் புகைப்படக் கலையின் முன்னோடி, கோகிலம் சுப்பையாவின் வாழ்வும் எழுத்தும், டீவைவநச டிசநற?, தலவாக்கொல்லை குரூப்: மலைநாட்டு மக்களின் போராட்டம், மலையருவி-மலையக எழுத்தின் விளைநிலம்: தமிழருவி கந்தசுவாமியின் அரும்பணி, இந்தியத் தமிழர்களும் வாக்குரிமையும், மலைநாட்டின் அரசியல், இலக்கியச் சிந்தனைகள், மே வரெங்: ‘இங்கே வா’ நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு ஆகிய தலைப்புகளில் பலராலும் அறியப்படாத பல்வேறு சுவையான தகவல்களை உள்ளடக்கியதாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72536).