என்.கே.துரைசிங்கம். பிரான்ஸ்: அறவழி நண்பர்கள் வட்டம், தென்மர் வெளியீடு, இல. 50 rue du mont cenis, 75018, Paris, 1வது பதிப்பு, பெப்ரவரி 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
72 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
கனடாவில் இயங்கிவரும் பல்வேறு சமூக சேவைகள் அமைப்பினரோடு இணைந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க செயற்பாட்டாளரான சமூகச் சிற்பி திரு. வி.எஸ். துரைராஜா அவர்கள் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களது துயர் துடைக்கும் பணிக்காக ஆரம்பிக்கப்பெற்ற ’ரொரன்ரோ மனித நேயக் குரல்: அமைப்பின் செயலாளராகவும் இணைந்து பணியாற்றியவர். முன்னாள் கனடா தமிழ்க் கல்லூரி தலைவரும், சத்தியப்பிரமாண ஆணையாளருமான இவருக்கு, தென்மராட்சி சர்வதேச நிறுவனங்களின் ஒன்றியம் சாவகச்சேரியில் நடத்திய விழாவில் அவரது சமூகப்பணிகளை கௌரவித்து வாழ்நாள் சாதனையாளர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. அதையொட்டி வீ.எஸ். துரைராஜா அவர்களின் சமூக வாழ்க்கை பற்றிய இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.