17899 கணபதி சுப்பையா வாய்மொழி வரலாறு.

க.பரணீதரன் (நேர்காணல்), தில்லைநாதன் கோபிநாத், (தொகுப்பாசிரியர்). கலாமணி பரணீதரன் (பதிப்பாசிரியர்). அல்வாய்: ஜீவநதி கலைஅகம், 1வது பதிப்பு, கார்த்திகை 2024. (அல்வாய்: பரணி அச்சகம், நெல்லியடி).

52 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-624-6601-25-6.

பன்றித் தலைச்சி அம்மன் ஆலய பிரவேசப் போராட்டம், மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயப் பிரவேசப் போராட்டம், தேநீர் கடைப் பிரவேசப் போராட்டங்கள் உட்பட பல்வேறு சாதியத் தகர்ப்புப் போராட்டங்களில் முன்னின்று இரத்தம் சிந்திப் போராடிய கணபதி சுப்பையா அவர்களது வாய்மொழி வரலாறு இதுவாகும். கணபதி சுப்பையா ஆசிரியப் பணியில் ஈடுபட்டவர். சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் அங்கம் வகித்த இவர் இளவயதிலிருந்தே  தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டு கொதித்து அதற்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவிற்காக பல தடவைகள் நீதிமன்றம் முதல் பொலிஸ் நிலையம் வரை சென்றவர். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 394ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் வாய்மொழி வரலாறுகள் தொடரில் நான்காவது பிரசுரமாக வெளிவந்துள்ளது).

ஏனைய பதிவுகள்