க.பரணீதரன் (நேர்காணல்), தில்லைநாதன் கோபிநாத், (தொகுப்பாசிரியர்). கலாமணி பரணீதரன் (பதிப்பாசிரியர்). அல்வாய்: ஜீவநதி கலைஅகம், 1வது பதிப்பு, கார்த்திகை 2024. (அல்வாய்: பரணி அச்சகம், நெல்லியடி).
52 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-624-6601-24-9.
பன்றித் தலைச்சி அம்மன் ஆலய பிரவேசப் போராட்டம், மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயப் பிரவேசப் போராட்டம், தேநீர் கடைப் பிரவேசப் போராட்டங்கள் உட்பட பல்வேறு சாதியத் தகர்ப்புப் போராட்டங்களில் முன்னின்று இரத்தம் சிந்திப் போராடிய முரகன் சின்னையா அவர்களது வாய்மொழி வரலாறு இதுவாகும். இந்த வாய்மொழி வரலாற்று நேர்காணலானது நூலக நிறுவனத்தின் வாய்மொழி வரலாற்று ஆய்வு நிலைய செயற்றிட்டம் மூலம் பதிவுசெய்யப்பட்டதாகும். நூலக நிறுவனத்தில் பணியாற்றிய திரு. கலாமணி பரணீதரனால் பதிவுசெய்யப்பட்ட இந்த நேர்காணல், இயல்பானதொரு உரையாடலாகவே பதிவுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடப்பட வேண்டியதாகும். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 393ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் வாய்மொழி வரலாறுகள் தொடரில் மூன்றாவது பிரசுரமாக வெளிவந்துள்ளது).