க.பரணீதரன் (நேர்காணல்), தில்லைநாதன் கோபிநாத், (தொகுப்பாசிரியர்). கலாமணி பரணீதரன் (பதிப்பாசிரியர்). அல்வாய்: ஜீவநதி கலைஅகம், 1வது பதிப்பு, கார்த்திகை 2024. (அல்வாய்: பரணி அச்சகம், நெல்லியடி).
52 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-624-6601-26-3.
வெற்றியன் இராசரத்தினம் சங்கானை-நிச்சாமம் கிராமத்தில் பிறந்தது முதல் அங்கேயே வாழ்ந்து வருபவர். ஈழத்து சாதிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட முதன்மையான கிராமமாக நிச்சாமம் கிராமம் விளங்குகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான கொடுமைகளை உலகறியச் செய்ததில் நிச்சாமம் முன்னிற்கின்றது. நிச்சாம சாதிய எதிர்ப்பு போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்களில் ஒருவரான வெற்றியன் இராசரத்தினம் இந்நேர்காணலின் வழியாக, குறித்த பிரச்சினைகளின் ஆரம்பம் முதல் தற்கால நிச்சாமம் பற்றி விரிவானதொரு வாய்மொழி வரலாற்றை கூறியுள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 395ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் வாய்மொழி வரலாறுகள் தொடரில் ஐந்தாவது பிரசுரமாக வெளிவந்துள்ளது).