17903 எனது மக்களின் விடுதலைக்காக.

பொன்ராசா அன்ரன் (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: பிரவாகம் வெளியீடு, நீதியான சமாதானத்துக்கும் ஜனநாயகத்துக்குமான நடுவம், Centre for Just Peace and Democracy(CJPD), Reussmatt 10, 6032 Emmen ,1வது பதிப்பு, மே 2022. (அச்சிட்ட இடம் குறிப்பிடப்படவில்லை: செரி அச்சகம்).

(20), 21-800 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1500., அளவு: 25×18 சமீ., ISBN: 978-3-9523172-7-3.

மொத்தம் 197 ஆவணங்களும், பக்கம் 681-774 வரையில் அடங்கும் ஏராளமான அரிய புகைப்படங்களும் இப்பெரும் ஆவணத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ‘கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக நிலவிய அரசியல் சூழல், போராட்ட வெற்றி-தோல்வி, நடைமுறை அரசின் கட்டமைப்பு, தேசியம் உள்ளார்ந்த பரிணாம வளர்ச்சி ஆகியவை தொடர்பாக ஆண்டாண்டாக தலைவர் வே.பிரபாகரன் வழங்கிய மாவீரர் நாள் உரை, செவ்வி, அறிக்கை, செய்தி, கடிதம், உரை, ஆசிச் செய்தி போன்றவை ஒழுங்காக இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் ‘சண்டே’ என்ற ஆங்கில வார ஏட்டின் 1984 மார்ச் 11-17 பதிப்பில் தலைவர் பிரபாகரனின் செவ்வியோடு தொடங்கும் இந்த ஆவண நூல், 2009 ஜனவரி 12இல் அவர் அனுப்பிய நியமனக் கடிதத்துடன் நிறைவு காண்கிறது. இந்த உரையே அவர் உலகத்துக்கு விடுத்த இறுதிப் பகிரங்க உரை என்று உறுதியாகக் கொள்ளலாம். (தொகுப்பாசிரியர்-பதிப்புரையில்).

ஏனைய பதிவுகள்

Casino Online

Content Freespins Att Skaffa fram Hem Inom Casino Tilläg! Interwetten Är Ensamma Försåvit Tillägg Utan Insättning Just nu/h2> Även anhöriga kan lyssna p av sig