17905 தமிழ்ப் பெண்புலி.

நிரோமி டி சோய்ஸா (ஆங்கில மூலம்), சிவகாசி பிரகாசம் (தமிழாக்கம்). தமிழ்நாடு: உமாமகேஸ் டாட் காம்., மயிலாடுதுறை, 1வது பதிப்பு, 2014. (சென்னை: உதயம் ஓப்செட்).

240 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21×14 சமீ.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தீவிரமாக இயங்கிய ஓர் இளம் வீராங்கனையின் கதை இது. பதுங்கிய பெண் புலிகள், எனது அப்பம்மா வீடு, கோபமும் வெறியும், இறப்பும் புதைப்பும், மாபெரும் லட்சியத்துக்காக, ஒரு நம்பிக்கைத் துரோகம், ரோஷன் என்னும் புலி, ஒரு ராணுவ வகைப் பயிற்சி முகாம், மனதை மாற்றிக்கொள்ள இப்பொழுதும் நேரமுண்டு, அமைதியும் சமாதானமும் நீடிப்பதில்லை, போர்க்கள அனுபவம், பகைமைக்கு இடைவேளை, மெய்மையைப் புறக்கணிக்க முயற்சி, வாழ்வின் சில இறுதித் தருணங்கள், இதெல்லாம் எங்கே போய் முடியும், எட்ட முடியாத கனவு, காட்டுக்குள் கண்ணாமூச்சி, பயங்கரமான நாட்கள், இங்கிருந்து எங்கு செல்ல, நடந்த காரியங்கள் ஆகிய 20 அத்தியாயங்களில் இச்சுயசரிதை எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

16525 குறளின் குரல்.

பா.சிவபாலன். யாழ்ப்பாணம்: பா.சிவபாலன், 214/4 C, இராமநாதன் வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி). 140 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18.5×13.5