17906 அன்பின் சோதனையும் சாதனையும்.

யோ. அருளப்பு. லண்டன் SW16 6RD: யோ. அருளப்பு, 78, Fenthorpe Road, Streatham,  1வது பதிப்பு, ஜுலை 1995. (Middlesex HA2 7HE: Ability Printing, 241, Imperial Drive, Rayners Lane).

(8), 120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

முன்னாள் பாடசாலை அதிபரான யோ.அருளப்பு தனது வாழ்க்கை வரலாற்றை இந்நூலில் பதிவுசெய்கின்றார். எனது வாழ்கை வரலாறு, என் சரிதை, அநீதியை எதிர்ப்பேன், உலகின் பெரிய அறிவாளி யார், ஆபத்தில் உதவிய அன்பன், இலவு காத்த கிளி, இல்லாளைத் தெரிந்ததில் இறைவனின் சித்தம், எதிரியோடு உறவாடு, நீ நினைப்பது போல அவன் வரமாட்டான், அந்தோனியாரின் அதிசயம், உத்தியோகத்தை உதறியது, மீண்டும் ஆசிரியத் தொழில், பணிவும் பயனும், பிறருக்காக வாழ்ந்தவர் இவர், தண்டனைக்குரிய மாற்றம், தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன், சுடப் பழகுங்கள், கலவரத்தால் காணி தேடிய படலம், அரிப்பில் வெள்ளத்தின் ஆக்கிரமிப்பு, குளம் கட்டி வளம் பெருக்கியது, வேலையும் வேலியும், கன்னாட்டி பாடசாலை புகழ் ஏணியில், பாம்புக் கடிகளில் மாதாவின் அருள், கமத்திலே காடைத்தனம், பலியெனப் பிடித்து கிலிகொண்ட அரசின் விடுதலை, யாரிடம் சொல்லி ஆறமுடியும், குடும்பக் கட்டுப்பாட்டில் அறிவுத் தட்டுப்பாடு, எனது நெற்றிக்கு நேரே நீட்டிய துவக்கு, யானையால் வந்த ஆபத்து, இலண்டனுக்கு வந்தேன், இல்லறச் சோலையில் பத்துப் பூக்கள், என்னை வழிநடத்திய தெய்வம், சங்கீதம் ஆகிய தலைப்புகளில் இவ்வாழ்க்கை வரலாறு சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்