17907 எம்.எஸ்.எஸ். ஆழப் பதித்த தடங்கள்.

மா.கருணாநிதி. யாழ்ப்பாணம்: பிரசாந்தி வெளியீடு, 1வது பதிப்பு, 2023. (நெல்லியடி: பரணி அச்சகம்).

xiv, 94 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-59-7.

அதிபர் மூ.சி.சீனித்தம்பி (18.02.1920-18.10.1995) அவர்களுடைய கல்வி மற்றும் சமூக சேவைகள் பற்றிய பதிவுகள். அவரது ஜனன நூற்றாண்டினையும், அமரத்துவம் அடைந்த 25ஆவது ஆண்டினையும் நினைவுகூரும் முகமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. பிறப்பும் பின்புலமும், மூ.சி.சீனித்தம்பி அவர்களின் கல்வியும் தொழில் வாழ்க்கையும், மூ.சி.சீனித்தம்பி கல்வித் துறையில் பதித்த தடங்கள், மூ.சி.சீனித்தம்பி அவர்களின் சமூக பொருளாதார சேவைகள், மூ.சி.சீனித்தம்பி அவர்களின் கலை இலக்கிய ஆர்வம், எம்.எஸ்.எஸ். இன் ஆன்மீகமும் விளையாட்டுத்துறை ஈடுபாடும், முடிவுரை ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் விரிகின்றது. மூ.சி.சீனித்தம்பி அவர்கள் தமது 75 ஆண்டு கால வாழ்க்கையில் 26 ஆண்டுகள் தேவரையாளி இந்துக் கல்லூரியில் தகைசார் அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் ஏறக்குறைய 20 ஆண்டுகள் சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவற்றை சமூக பொருளாதார சேவைகளுக்கு வித்திட்ட சிந்தனைகள், மனித உரிமைகளுக்கான முன்னெடுப்புகள், பெண்களுக்கான வலுவூட்டல், வதிரி அபிவிருத்தி நிறுவனம், வதிரி அபிவிருத்தி நிறுவனத்தின் நூலக சேவை என ஐந்து பிரிவாக வகுத்து ஆய்வுசெய்ய முடியும்.

ஏனைய பதிவுகள்