மணி விழா ஏற்பாட்டுக் குழு. வேலணை: ஆறுமுகம் தங்கராஜா மணிவிழா ஏற்பாட்டுக் குழு, நவம்பர் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).
180 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.
வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆறுமுகம் தங்கராஜா தனது ஆரம்பக் கல்வியை வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலையில் ஆரம்பித்தார். பின்னர் வேலணை மத்திய கல்லூரியில் தன் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்து 1979-1983 காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப் பிரதேசத்தில் அரச பாடசாலைகளில் ஆசிரியராகப் பணியாற்றியதன் மூலம் கல்வித்துறையில் தன் கால்பதித்துக்கொண்டார். ஐந்தாண்டுகளின் பின்னர், 1989இல் யாழ்.மத்திய கல்லூரிக்கு மாற்றலாகி வந்தார். இரண்டாண்டுகளில் மீண்டும் கிழக்கின் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியில் பணியேற்று எட்டாண்டுகள் அங்கே சேவையாற்றியுள்ளார். சேவைக்காலத்தில் 1989-2010 வரையிலான காலகட்டத்தில் உயர்தர வகுப்பு புள்ளி மதிப்பிடல் பணியிலும் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து மேலதிக பிரதம பரீட்சகராகவும் பணியாற்றியுள்ளார். 2010இல் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்டார். திரு. ஆ.தங்கராஜா அவர்களின் அறுபதாண்டு மணிவிழாவை 5.11.2015இல் கொண்டாடியவேளை வெளியிடப்பெற்ற சிறப்ப மலர் இதுவாகும்.