திருநாவுக்கரசு கமலநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் கலாநிதி சுப்பிரமணியம் வித்தியானந்தன் நூற்றாண்டு மலர் வெளியீட்டுக் குழு, ‘ஸ்ரீவித்யா’, 3ஆவது ஒழுங்கை, தலங்காவல் பிள்ளையார் கோவில் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xiv, 291 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-624-93270-8-5.
கலாநிதி சுப்பிரமணியம் வித்தியானந்தன் நூற்றாண்டு மலர், உறவினர்கள், அணுக்கத் தொண்டர்கள் ஆகியோரின் மனப்பதிவுகளை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது. ஈழத் தமிழினத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டு பாரம்பரிய சிறப்புகளை உறுதிபெறச் செய்வதுடன் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களின் வரலாற்றையும் அதன்வழி எமது சமூகத்துக்கான அவரது அளப்பரிய சேவைகளையும் பணிகளையும் எமது இளம் சமூகமும் அறிந்துகொள்ள வாய்ப்புக் கிட்டியுள்ளது.