17912 மா.கருணாநிதி: வாழ்வும் படைப்பும் (கட்டுரைகளும் நேர்காணலும்).

கலாமணி பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

120 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-79-5.

நேர்காணல் (க.பரணீதரன்), புலமைச் செழுமையும் ஆய்வுச் சிரத்தையும் கொண்ட கல்வியியல் பேராசான் (இ.இராஜேஸ்கண்ணன்), A Pillar among the Educationists in Sri Lanka (Anura Bandara), அறிவு வழங்கலை உயிர்ப்பு நிலைக்கு உள்ளாக்கி வரும் பேராசிரியர் (சபா.ஜெயராசா), பேராசிரியர் மா.கருணாநிதியின் கல்விச் சாதனைகள் (சோ.சந்திரசேகரம்), கல்வித்துறையின் பேராசான் (மா.செல்வராஜா), பேராசிரியர் கருணாநிதியும் நானும்: சில மனப்பதிவுகள் (தை.தனராஜ்), பேராசிரியர் மா.கருணாநிதி அவர்களின் கசடற்ற கல்வியும் கற்றாங்கொழுகும் பண்பாடும் (செ.சேதுராஜா), பேராசிரியர் மா.கருணாநிதியின் பல்கலைக்கழக தொழில் வாழ்க்கை: ஓர் அனுபவ தரிசனக் குறிப்பு (எஸ்.அதிரதன்), அவையத்து முந்தியிருக்கச் செய்த தாய் (செல்லக்குட்டி கணேசன்), பேராசிரியர் மா.கருணாநிதி அவர்களின் கல்விசார் ஆய்வுத்துறைக்கான அடிப்படைகள்: கற்றல் கற்பித்தல் மேம்பாட்டு வழிமுறைகள் மற்றும் சமகாலக் கல்வித் திரட்டு ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்ட உசாவுகை (அ.பௌநந்தி), கல்விச் சமூகவியலை அடிப்படையில் இருந்து  விளங்கிக்கொள்ள சிறந்த நூல் (தேவராசா முகுந்தன்), எம்.எஸ்.எஸ்.ஆழப்பதிந்த தடங்கள் (வதிரி சி.ரவீந்திரன்), பேராசிரியர் மா.கருணாநிதி மொழிபெயர்த்த நூல் ‘புதிய கற்றல் செல்நெறிகள்’ (ரோலன்ட் அபேபால), ‘இலங்கையில் கல்வி வளர்ச்சி’ புத்தக மதிப்புரை (எவ்.எம்.நவாஸ்தீன்), பேராசிரியர் மா.கருணாநிதியின் ‘நினைக்கப்பட வேண்டிய ஆளுமை அமரர் க.மார்க்கண்டு அவர்களின் சிறு வரலாறு’ (த.கலாமணி), ‘முகாமைத்துவக் கொள்கைகள்-ஓர் அறிமுகம்’ நூல் பற்றிய ஊடறிகை (க.பரமானந்தம்), அனுலா டீ சில்வாவின் ‘அபி யாலுவா’ வை தமிழில் ‘நாம் நண்பர்கள்’ என மொழிபெயர்த்த பேராசிரியர் மா.கருணாநிதி (மேமன் கவி), கல்விக்கான வெளிநாட்டுப் பயணங்களும் அனுபவங்களும் (மா.கருணாநிதி) ஆகிய கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 355ஆவது நூலாக வெளிவந்துள்ளது. அவர்களின் ‘ஈழத்து இலக்கிய ஆளுமைகள் வரிசை’ யில் மூன்றாவது நூலாகவும் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72244).

மேலும் பார்க்க:

கல்விப் பணியில் சவால்களும் சாதனைகளும். 17265        

923.8 வர்த்தகர்கள்

மேலும் பார்க்க:

பாக்கியாமிர்தம்: 17162

924     மொழியியலாளர்கள்

மேலும் பார்க்க:

தனிநாயக அடிகளாரின் ஒப்பிலக்கியச் சிந்தனைகள். 17996

ஏனைய பதிவுகள்