முஹம்மது முபத்திஹ் (ஆங்கில மூலம்), ஃபசான் நவாஸ் (தமிழாக்கம்). கொழும்பு: விஸ்டம் சொசைட்டி, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 10: UDH Compuprint, மொஹிதீன் மஸ்ஜித் வீதி).
47 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-624-95441-1-6.
Contribution of Muslim Scientists towards the development of Sciences என்ற தலைப்பில் கலாநிதி Mohammed Mofattih எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம். விஞ்ஞான முன்னேற்றத்தில் முஸ்லிம் விஞ்ஞானிகளின் பங்கு, இஸ்லாமிய விஞ்ஞான நகர்வின் ஆரம்பம், பக்தாத்தில் நிஸாமிய்யா பல்கலைக்கழகம், ஸபா சகோதரத்துவ கழகம், இஸ்லாமிய விஞ்ஞானிகளின் ஆய்வு முறைகள், முஸ்லிம் விஞ்ஞானிகளும் பரிசோதனை முறையும், மருத்துவத்துறையில் முஸ்லிம்கள், ஸகரியா ராஸியின் அளப்பரிய பணிகள், அபூரைஹான் அல் பிரூனி ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71596).