இ.அம்பிகைபாகன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).
35 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ.
அறிமுகம், இலங்கைக்கு வருகை, மானிப்பாயில் மருத்துவமனை, சுதேசிகளுக்கு மருத்துவக் கல்வி, தமிழில் கற்பித்தல் பற்றிய எண்ணம், அன்றைய தேசாதிபதியின் கருத்தும் கிறீனின் மனவுறுதியும், விடுமுறையின் பின் யாழ் வருகை, தமிழில் மருத்துவக் கல்வி, கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் அறிவியல் தமிழும், கிறீனின் அடிச்சுவடு, ஈழத்தில் தமிழ் வளர்த்த மானிப்பாய் கிறீன் ஆகிய பன்னிரண்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ‘அம்பி’ என்னும் புனைபெயரில் சிறுவர்களுக்கும், வளர்ந்தோருக்குமான ஆக்க இலக்கியங்களைப் படைத்துவந்த இராமலிங்கம் அம்பிகைபாகர் (17.02.1929-27.04.2024) இலங்கை அரசாங்க பதிப்புத்துறையிலும், பப்புவா நியுகினியாவில் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். பின்னாளில் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து அங்கு சிட்னியில் வாழ்ந்து தனது 95ஆவது அகவையில் மறைந்தவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4749).