17915 இலக்கியத் தென்றல்: கோவிலூர் செல்வராஜன் பொன்விழா சிறப்பு மலர்-2023.

கோவிலூர் செல்வராஜன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

174 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×17.5 சமீ.

கலை, இலக்கிய ஊடகத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்த பல்துறைக் கலைஞர் கோவிலூர் இரா. செல்வராஜன் அவர்களின் பொன்விழா சிறப்பு மலர். மட்டக்களப்பின் திருக்கோவிலைச் சேர்ந்த இவர் முழுநேர இலக்கியச் செயற்பாட்டாளராக விளங்குகின்றார். தமிழில் கதை, கட்டுரை, கவிதை, விமர்சனம் ஆகியவற்றை எழுதுவதுடன் சஞ்சிகை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். கலைத்துறையில் பாடகராகவும், பொப்பிசைக் கலைஞராகவும்,  நடிகராகவும், இசையமைப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் அறியப்பட்ட இவர் லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார். இச்சிறப்பு மலரில் இவரைப்பற்றி தமது மனப்பதிவுகளை வாழ்த்துரைகளாக கலை, இலக்கியத்துறைசார்ந்த பலரும் வழங்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்