சி.ஜெயசங்கர். மட்டக்களப்பு: மூன்றாவது கண், உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக் குழு, சீலாமுனைக் கலைக்கழகம், சீலாமுனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (மட்டக்களப்பு: கணா டிஜிட்டல் அச்சகம், இல.43, திருக்கோணமலை வீதி).
16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.,
மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார பேரவையினர் நடாத்தும் முத்தமிழ் விழாவில் கௌரவிக்கப்பட்ட கலைஞர்களுள் ஒருவரான சீலாமுனையைச் சேர்ந்த வடமோடிக் கூத்து அண்ணாவியார் சின்னையா ஞானசேகரம் அவர்களைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் அடங்கிய சிறு நூல் இது. சீலாமுனைக் கூத்துக் கலைக்கழகத்துடன் இணைந்து அண்ணாவியாராக செயற்பட்டு ‘சிம்மாசன யுத்தம்’ என்ற கூத்து மூலம் பல இளந்தலைமுறைக் கூத்துக் கலைஞர்களை உருவாக்கியவர் அண்ணாவியார் சின்னையா ஞானசேகரம். த.கிருபாகரன், சீலாமுனைக் கலைக்கழகம், த.ஜெகநாத சர்மா ஆகியோரின் வாழ்த்துரைகளுடன், அண்ணாவியார் பற்றிய சி.ஜெயசங்கர் அவர்களின் அறிமுகக் கட்டுரையும், ‘வடமோடிக் கூத்தின் அண்ணாவியர் – சின்னையா ஞானசேகரம்’ என்ற தலைப்பில் செ.சிவநாயகம் அவர்களின் ஆக்கமும், ‘மத்தளத்தில் வித்துவான்’ என்ற தலைப்பில் காயத்திரி கிருபாகரன் அவர்களின் ஆக்கமும், ‘நமது முன்னோரை நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்’ என்ற தலைப்பில் து.கௌரீஸ்வரனின் ஆக்கமும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1424).