எஸ்.தம்பிஐயா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
16 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-5881-78-9.
அண்ணாவியார் எஸ்.தம்பிஐயா அவர்களின் தன் வரலாறாக எழுதப்பட்டு கையெழுத்துப் பிரதியாக நீண்டகாலம் அச்சுவாகனமேறக் காத்திருந்த நிலையில், அதனைத் தேடிப்பெற்று ஒரு அனுபந்தமாக, பேராசிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் தங்களால் எழுதப்பட்ட ’இத்தி மரத்தாள்’ என்னும் நூலில் இடம்பெறச் செய்திருந்தனர். அண்ணாவியார் எஸ்.தம்பிஐயா மரணமடைந்து 35 ஆண்டுகளின் பின்னர் இவ்வனுபந்தம் தனிநூலாக வெளியிடப்பட்டுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 258ஆவது நூலாக வெளிவந்துள்ளது.