க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
அல்வாய்க் கிராமத்தில் பெண் வேடம் தரித்த நாடக ஆளுமை மாணிக்கம் செல்லத்தம்பி (க.பரணீதரன்), மா.செல்லத்தம்பி அவர்களுடனான நேர்காணல் (வதிரி சி.ரவீந்திரன்), எங்கள் செல்ல அப்பா (எம்.சி.சுதாகரன்) ஆகிய மூன்று படைப்பாக்கங்களை இச்சிறு நூல் உள்ளடக்குகின்றது. அல்வாய்க் கிராமத்தின் பெருமைக்குரிய நாடகக் கலைஞர்களுள் முக்கியமான ஒருவர் திரு.மாணிக்கம் செல்லத்தம்பி அவர்கள். பாடசாலைக் கல்விக் காலத்தில் கலை விழாக்களில் மேடையேற்றப்பட்ட நாடகங்களிலும் மூத்த நாடகக் கலைஞர்களால் பழக்கப்பட்ட சமூக நாடகங்களிலும் இசை நாடகங்களிலும் முக்கியமான பெண் பாத்திரங்களை ஏற்று, பாடி நடித்து வந்தவர். சிவராத்திரி தினங்களில் அல்வாய் சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் அரங்கில் அண்ணாவியார் எஸ்.தம்பிஐயா அவர்களால் மேடையேற்றப்பட்ட முழு இரவு நாடகங்களான ‘சீமந்தினி’ நாடகத்தில் சீமந்தினியாகவும், ‘பவளக்கொடி’ நாடகத்தில் பவளக்கொடியாகவும் நடித்த இவரின் நடிப்பு அந்நாளில் பலராலும் விதந்து பேசப்பட்டது. பாடசாலை நாடகங்களிலும், சமூக நாடகங்களிலும் நடித்து வந்த இவரை நல்லதொரு இசைஞானமுள்ள இசை நாடகக் கலைஞராக அடையாளப்படுத்தியதில் இவ்விரு இசை நாடகங்களுக்கும் பெரும்பங்குண்டு.