தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2023. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
x, 11-104 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-00-2257-6.
தம்பிஐயா தேவதாஸ் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் BA பட்டமும் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் B.Ed பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் Dip. in Journalism பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.A. Journalism and Mass Communication பட்டமும் பெற்றவர். ஒற்றை மனிதராக நின்று, இலங்கை திரைப்படத்துறை தொடர்பாக அதிகமான நூல்களை புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். அத்தொடரில் அண்மைக்கால வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் ருக்மணிதேவி ஒரு தமிழ்ப் பெண், நாடக நடிகை ருக்மணிதேவி, இலங்கையின் முதலாவது திரைப்பட நாயகி, ருக்மணிதேவி நடித்த தமிழ்ப்படம், ருக்மணிதேவி பாடிய தமிழ்ப் பாடல்கள், பல பாடல்கள் இடம்பெற்ற தமிழ்ப்படம், இலங்கைத் தமிழ்ப்படங்களில் ருக்மணிதேவி, கிராமபோன் பாடகி ருக்மணிதேவி, இலங்கைக் குயில் ருக்மணிதேவி, இரட்டை வேடம் அறிமுகமான முதலாவது சிங்களப் படம், முதலாவது சிங்களப்படத்தை தயாரித்த எஸ்.எம். நாயகம், எஸ்.எம். நாயகத்தின் இளமைக்காலம், எஸ்.எம். நாயகத்தின் படம் ஒளிப்பதிவு, நடிகர்களின் அனுபவங்கள், முதலாவது சிங்களப்படம், முதலாவது சிங்கள படம் பற்றிய விமர்சனம், சிங்களப் படத்தில் கே.தவமணிதேவி, எஸ்.எம். நாயகம் தயாரித்த ‘கடல் கடந்த தமிழன்’, ஆர்.முத்துசாமிக்கு வெற்றி வாங்கிக் கொடுத்த ‘பிறேம தரங்கய’ என்ற படம், எஸ்.எம். நாயகம் தயாரித்த இரண்டு படங்கள், எஸ்.எம். நாயகம் தயாரித்த ‘மாதலன்’, எஸ்.எம். நாயகத்தின் ஏனைய படங்கள், எஸ்.எம். நாயகத்தின் சினிமாப் பத்திரிகை எஸ்.எம். நாயகத்தின் ஆங்கிலப் பத்திரிகை ஆகிய 24 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.