வெலிவிட்ட ஏ.ஸி.ஜரீனா முஸ்தபா. கடுவலை: அப்துல் கரீம் ஜரீனா, 120 H, போ கஹவத்தை வீதி, வெலிவிட்ட, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (புத்தளம்: Design OK Printers).
xvi, 161 பக்கம், விலை: ரூபா 850., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-97665-2-5.
ஆசிரியர் எழுதிய 14ஆவது நூல் இதுவாகும். நாவலிலக்கியப் படைப்பாளியாகத் தன்னை முன்னிருத்திக்கொண்டுள்ள ஜரீனா முஸ்தபா, இந்நூலினை ஒருவகையில் தனது சுயசரிதை போலவும், மற்றொரு வகையில் தன் அனுபவங்களின் தொகுப்புப் போலவும், இன்னொரு வகையில் சுய முன்னேற்றத்திற்கான வாழ்வியல் வழிகாட்டியாகவும் எழுதியுள்ளார். எதிர்நீச்சலும் போராட்டமும் நிகழ்ந்த தன் வாழ்வினை விளக்கமாக அறிமுகப்படுத்துகின்றார். தான் வாழ்ந்த இல்வாழ்வு, தனது இலக்கியப் பயணம், வெளியிட்ட நூல்கள், அவற்றின் பின்னணி, அவற்றை எழுதத் தூண்டிய காரணிகள், அவற்றுக்குத் துணையாக நின்றவர்கள், தன்னை நோகடித்தவர்கள் என்று ஒரு பெண் இலக்கியவாதியின் அனுபவ முத்திரைகளாக இந்த நூல் அமைந்துள்ளது. 2017-2018 காலப்பகுதியில் தேசியப் பத்திரிகையான மித்திரன் வார மலரில் ’நாவல் எழுதுவது எப்படி?’ என்ற தலைப்பில் சில காலமாகத் தொடராக எழுதிவந்த கட்டுரைகளையும், பின்னர் ‘ஒரு பெண் எழுத்தாளரின் அனுபவப் பகிர்வு’ என்ற அனுபவத் தொடரையும் இணைத்து இந்நூலை வெளியிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71445).