17925 இ.சு.முரளிதரன்: வாழ்வும் படைப்பும்.

கலாமணி பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

160 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-87-0.

இந்நூலில் இ.சு.முரளிதரன், ஜீவநதி (க.பரணீதரன்), தினகரன் (துறையூர்தாசன்) ஆகிய ஊடகங்களுக்கு வழங்கிய மூன்று நேர்காணல்களும் க.பரணீதரன் (கொண்டாட்டத்துக்குரிய மீ நயப்புப் படைப்பாளி இ.சு.முரளிதரன், கலையுருக்காட்டி காட்டும் கோலங்கள்), சோ.பத்மநாதன் (இ.சு.முரளிதரனின் ‘நுங்கு விழிகள்’, இ.சு.முரளிதரனின் ‘நளதமயந்தி’), பா.விஜய் (மூன்றடியில் செதுக்கப்பட்ட ஒரு சொற்சித்திரம்), குப்பிழான் ஐ.சண்முகன் (இ.சு.முரளிதரனின் ‘புழுவிற்கும் சிறகு முளைக்கும்’  சில குறிப்புகள்), ஜபார் (சினிமா: என்றென்றும் வியக்கத்தக்க மொழி), சூரன் (தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம்: வணிகமாக்கப்பட்ட வலிகள் சில குறிப்புகள்), வ.வடிவழகையன் (இ.சுமுரளிதரனின் ‘நளதமயந்தி’), த.கலாமணி (கவித்துவச் சொல்லாடலும் புனைவும்: ‘கடவுளின் கைபேசி எண்’ சிறுகதைத் தொகுதியை முன்னிறுத்தி), புலோலியூர் வேல்.நந்தகுமார் (ஈழத்துத் தமிழ்க் கதைப்பிரதிகளில் தனித்துத் தெரியும் திசை- இ.சு.முரளிதரனின் ‘கடவுளின் கைபேசி எண்’ குறித்த ஒரு மறுவாசிப்பு, இ.சு.முரளிதரனின் தொகுப்பில் ‘இளையராஜாவும் இசைக்கருவிகளும்’), கே.எம்.செல்வதாஸ் (இ.சு.முரளிதரனின் ‘கடவுளின் கைபேசி எண்”, புதிய பதங்கள் விளையும் விளைநிலமாக ‘நெருநல்’), சி.ரஞ்சிதா (‘சுரோடிங்கரின் பூனை’ கட்டுரைத் தொகுப்பு மீதான ஒரு பார்வை), ம.பா.மகாலிங்கசிவம் (இ.சு.முரளிதரனின் ‘இரட்டைக்கரு முட்டைகள்’), பே.வள்ளிமுத்து (ஈழத்துக் காளமேகம் இ.சு.முரளிதரன்), கி.விசாகரூபன் (அறிவோர் தெருவில் இ.சு.முரளிதரன்), வே.முல்லைத்தீபன் (திருவள்ளுவர் தெருவில் நியூட்டன்), ஆலவாய் அழகன் (தற்கால முகவரியும் நிரந்தர முகவரியும்), தானா விஷ்ணு (கவிதை மனம் வழி இயங்கும் மனம்), மா.பிரசாலினி (எங்கட காமிக்ஸ்), வெற்றி துஷ்யந்தன் (இசையின் இசையைப் பேசும் ‘இளையராஜாவும் இசைக்கருவிகளும்’), இ.இராஜேஸ்கண்ணன் (‘இளையராஜாவும் இசைக்கருவிகளும்’ காதுக்கினிய இசை இரசனையை காகிதத்தில் எழுதித் தந்த பிரயத்தனம்), தி.செல்வமனோகரன் (இ.சு.முரளிதரன் எனும் அபரபிரம்மன்), அருண்மொழிவர்மன் (’மற்றும் பலர் நடித்த’ ஓர் அறிமுகம்), தருமராசா அஜந்தகுமார் (இ.சு.முரளிதரனின் ‘ஓயாத கொலைகள்’), மேதினிகா முரளிதரன் (பின்னிணைப்பு- அப்பா) ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இ.சு.முரளிதரனின் 50ஆவது அகவை நிறைவில் அவரது படைப்புக்கள் பற்றிய பார்வைகளை மீட்டிப் பார்க்கும் ஒரு முயற்சி இது. (இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 362ஆவது நூலாக வெளிவந்துள்ளது. அவர்களின் ‘ஈழத்து இலக்கிய ஆளுமைகள் வரிசை’ யில் நான்காவது நூலாகவும் அமைகின்றது).  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72277).

ஏனைய பதிவுகள்

No deposit Incentives 2024

Content Best Casinos No Deposit Bonuses: Fun That have Crypto Incentives: All you have to Know Deteriorating Alternatives To the Totally free Twist Incentives Pokerstars