அன்னலட்சுமி இராஜதுரை. சென்னை 88: கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம், 26, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (சென்னை 32: பத்மாவதி ஆப்செட்).
x, 193 பக்கம், விலை: ரூபா 1200., இந்திய ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-94743-75-5.
ஜேர்மன் தமிழருவி வானொலியின் ‘மனோரஞ்சிதம் கலை இலக்கிய உலா’ நிகழ்ச்சி குறித்த தகவல் பதிவே இந்நூலாகும். இதில் விபுலானந்த அடிகளார், இரசிகமணி கனக.செந்திநாதன், வ.அ.இராசரத்தினம், வரதர், கலையரசு க.சொர்ணலிங்கம், மல்லிகை ஜீவா, டாக்டர் நந்தி, சிரித்திரன் சிவஞானசுந்தரம், ஈழகேசரி பொன்னையா, தெளிவத்தை ஜோசப், அன்புமணி இரா.நாகலிங்கம், செ.கணேசலிங்கன், ந.பாலேஸ்வரி, எஸ்.அகஸ்தியர், நாவேந்தன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், நீர்வை பொன்னையன், பத்மா சோமகாந்தன், புரவலர் ஹாஸிம் உமர், மு.சிவலிங்கம், மாஸ்டர் சிவலிங்கம், பிரேம்ஜி ஞானசுந்தரம், ராஜேஸ்வரி சண்முகம், துரை.விஸ்வநாதன், லெ.முருகபூபதி, சிற்பி சிவசரவணபவன், நா.சோமகாந்தன், கோகிலா மகேந்திரன், கே.எஸ்.சிவகுமாரன், தி.ஞானசேகரன், கே.ஆர்.டேவிட், சற்சொரூபவதி, சுதாராஜ், ஐ.தி.சம்பந்தன், தகவம் வ.இராசையா, மாத்தளை கார்த்திகேசு, கமலா தம்பிராஜா, செ.கதிர்காமநாதன், வவுனியூர் இரா. உதயணன், தம்பிஐயா தேவதாஸ், யோகா யொகேந்திரன், மா.பாலசிங்கம், செங்கை ஆழியான், இரா.சடகோபன், தெணியான் ஆகியோர் பற்றியும், பாரதி இதழ், ஈழகேசரி இதழ், மொழிபெயர்ப்புக் கலை, நாவலாசிரியைகள், புலம்பெயர் இலக்கியம் ஆகிய விடயங்கள் பற்றியும் எழுதப்பெற்ற 49 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.