வி.ரி.இளங்கோவன். யாழ்ப்பாணம்: கே.டானியல் பதிப்பகம், 76/2, கோவில் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், இல.10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
vii, 240 பக்கம், விலை: ரூபா 1360., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-93936-0-8.
ஈழத்து நவீன இலக்கியத்தை வளப்படுத்திய ஆளுமைகள் பலர் குறித்து பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளரான வி.ரி.இளங்கோவன் எழுதிய கட்டுரைகள் பல இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் இலங்கையர்கோன், க.தி.சம்பந்தன், சி.வைத்தியலிங்கம், அ.ந.கந்தசாமி, கனக.செந்திநாதன், க.சச்சிதானந்தன், மு.நல்லதம்பி, இ.நாகராஜன், யாழ்ப்பாணக் கவிராயர் பசுபதி, வித்துவான் வேந்தனார், அழகு சுப்பிரமணியம், கே.டானியல், டொமினிக் ஜீவா, நாவேந்தன், புதுமைலோலன், பேராசிரியர் நந்தி, சசிபாரதி, செ.கதிர்காமநாதன், தில்லைச்சிவன், காரை.சுந்தரம்பிள்ளை, சில்லையூர் செல்வராசன், க.இந்திரகுமார், பத்மா சோமகாந்தன், காவலூர் இராஜதுரை, அகஸ்தியர், செ.யோகநாதன், சொக்கன், அந்தனிசில், பேராசிரியர் கைலாசபதி, கா.சிவத்தம்பி, யோ.பெனடிக்ற் பாலன், தமிழ்ப்பிரியா, த.துரைசிங்கம், நாகேசு தர்மலிங்கம், நெல்லை க.பேரன், பாரதிநேசன், சி.சடாட்சரசண்முகதாஸ், கலாசூரி சிவகுருநாதன், கே.ஜி.மகாதேவா, முல்லையூரான், புதுவை இரத்தினதுரை, சு.வில்வரத்தினம், யாழூர் துரை, வி.சிவசாமி, அன்னலட்சுமி இராஜதுரை, லெ.முருகபூபதி, செ.கணேசலிங்கன், சோ.சந்திரசேகரன், நந்தினி சேவியர், மா.பா.சி., செங்கை ஆழியான், தோழர் சுரேந்திரன், தெணியான், நடனம், என்.கே.ரகுநாதன், ஆ.சதாசிவம், தெளிவத்தை ஜோசப், கணபதி கணேசன், உபாலி லீலாரத்ன ஆகியோர் பற்றிய மனப்பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் இலக்கியம், அரசியல், மருத்துவம், பத்திரிகை எனப் பல்துறை ஆளுமை மிக்கவர். மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகக் கே.டானியல் விளங்கியபோது இளங்கோவன் அதன் செயலாளராகப் பணிபுரிந்தவர். கே.டானியல் பதிப்பகத்தின் முதலாவது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.