கேணிப்பித்தன் (இயற்பெயர்: ச.அருளானந்தம்). மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜூலை 2022. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).
304 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5849-29-1.
முதிய வயதடைந்ததும், தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை மீள நினைத்துப் பார்ப்பதில் ஓர் ஆனந்தம் உண்டு. மீட்டிப் பார்ப்பவர் மிகுந்த அனுபவம் பெற்றிருப்பின் அவர் வாழ்வு மற்றையோருக்கும், குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டுதலாகவும் அமையும். கேணிப்பித்தன் அருளானந்தம் பெற்ற வாழ்வனுபவம் சாறாக இந்த நூலில் பிழிந்து தரப்படுகின்றது. ஆலங்கேணி கிராமத்தில் பிறந்த ஒரு சாதாரண பையன் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்துக்கு கல்விபெற வருவது, அதன்மூலம் தான் அதுவரை கண்டறியாத ஒரு உலகை அறிவது, அனுபவங்களைப் பெறுவது, ஆசிரிய கலாசாலை செல்வது, ஆசிரியராகப் பயிற்சி பெறுவது, உயர்கல்விக்காக பேராதனைப் பல்கலைக்கழகம் செல்வது, பட்டம் பெறுவது, ஆசிரியனாக, அதிபராக, கல்விப் பணிப்பாளராக உயர்வது, எழுத்தாளராக முகிழ்ப்பது, 106 நூல்கள் வெளியிடுவது, பல விருதுகள் பெறுவது, கல்விப் பணியினின்றும் ஓய்வு பெறுவது, முதிர்நிலை அடைவது என 85 வயது வரையான ஒரு உச்சம் நோக்கிய ஓட்டம் இந்த சுயவரலாற்று நூலில் இழையோடிச் செல்கின்றது. ‘ஆலங்கேணி’ என்ற கிராமத்தின் ஆத்மாவை தனது வாழ்க்கை அனுபவத்துடன் இணைத்து ஒரு சுயவரலாற்று நூலாகவே ஆசிரியர் இதனை உருவாக்கியுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 106786).