17931 ஒளிரும் நட்சத்திரங்கள்: தொகுதி 2.

க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

80 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-30-0.

ஈழத்துப் படைப்பாளிகளான அ.யேசுராசா, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், தெணியான், மல்லிகை சி.குமார், கலாநிதி த.கலாமணி, வேரற்கேணியன், பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன், கரவை மு.தயாளன், தியாகராஜா இராஜராஜன், புனிதவதி சண்முகலிங்கம், சாரங்கா ஆகியோரின் வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை முன்னதாக ‘ஜீவநதி ஆளமைச் சிறப்பிதழ்களில்’ பிரசுரமானவை. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 412ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்