சி.ரமேஷ். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
40 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 20×12.5 சமீ., ISBN: 978-624-6601-08-9.
வரதர் என அழைக்கப்படும் தி. ச. வரதராசன் (தியாகர் சண்முகம் வரதராசன்) 1.7.1924இல் பிறந்து 21.12.2006இல் மறைந்தவர். இதழியல்துறை, பதிப்புத்துறை என பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த இலக்கியவாதி இவர். ஈழத்து இலக்கியத்தில் மறுமலர்ச்சி எழுத்தாளர் என அழைக்கப்பட்டவர். வரதர் நூற்றாண்டு வரிசையில் முதலாவது நூலாக வரதர் பற்றி விரிவாகப் பேசும் இந்நூல் வெளிவந்துள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 383ஆவது நூலாக வெளிவந்துள்ளது.