கோவிலூர் செல்வராஜன். கல்முனை: பு.கேதீஸ், கல்முனை நெற் ஊடக வலையமைப்பு, 1வது பதிப்பு, 2023. (மட்டக்களப்பு: காந்தள் அச்சகம், புதுக்குடியிருப்பு).
104 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-94740-0-0.
இக்கட்டுரைத் தொகுப்பில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் இருந்து தமது எழுத்துக்களால் தமது புலமையையும் ஆளுமையையும் வெளிப்படுத்திய 41 தமிழ், முஸ்லீம் படைப்பாளிகள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவை முன்னர் கல்முனை நெற்றின் ‘பரிமாணம்’ பத்திரிகையில் இடம்பெற்றிருந்தன. வித்துவான் வி.சீ.கந்தையா, புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துப் பூராடனார், வ.அ.இராசரத்தினம், அருள் செல்வநாயகம், கவிஞர் நீலாவணன், எஸ்.பொன்னுத்துரை, வித்துவான் எப்.எக்ஸ்.சீ.நடராஜா, அன்புமணி இராசையா நாகலிங்கம், இரா.பத்மநாதன், பாவலர் பஸீல் காரியப்பர், கவிஞர் பாண்டியூரான், மருதூர் கொத்தன், திமிலைத்துமிலன், மாஸ்டர் சிவலிங்கம், ஆரையூர் நவம், கவிஞர் எருவில் மூர்த்தி, கவிஞர் சுபத்திரன், கலாபூஷணம் ஜீவம் ஜோசெப் அருளானந்தம், மணிப்புலவர் மருதூர் மஜீத், செல்வி கதிராமன் தங்கேஸ்வரி, ஆர்.டபிள்யூ.வி.அரியநாயகம், சங்கீதபூஷணம் சி.கணபதிப்பிள்ளை, நாவலர் ஈழமேகம், கவிஞர் அக்கரை மாணிக்கம், சண்முகம் சிவலிங்கம், மருதூர்க் கனி, அண்ணாவியார் கணபதிப்பிள்ளை, கலைக்கொழுந்தன், முகில்வண்ணன், எஸ்.பி.கனகசபாபதி, கல்லூரன், மணிவாசகன், கவிச்சுடர் அன்பு முகைதீன், நல்லரெட்ணசிங்கன் பாலேஸ்வரி, கவிஞர் குறிஞ்சிவாணன், நந்தினி சேவியர், இரா.கிருஷ்ணபிள்ளை ஆகிய படைப்பாளிகள் பற்றிய சிறு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.