க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
x, 162 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-6164-36-2.
இது குமரன் வெளியீட்டகத்தின் 1000ஆவது நூலாக வெளிவந்துள்ளது. குமரன் புத்தக இல்லத்தின் தாபகர் அமரர் செ.கணேசலிங்கனின் (09.3.1928-04.12.2021) மறைவையொட்டி வெளியிடப்பெற்றுள்ள இந்நூலில் செ.க. பற்றிய பல்வேறு தமிழறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ’செ.க.பற்றி’ என்ற முதலாம் பிரிவில் செ.கணேசலிங்கன் வாழ்க்கைப் பின்னணி (லறீனா ஏ.ஹக், விஜிதா சிவபாலன்), செ.கணேசலிங்கனின் எழுத்தாக்கங்கள் (லறீனா ஏ.ஹக், விஜிதா சிவபாலன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ‘செ.க. பற்றிப் படைப்பாளிகள்’ என்ற இரண்டாம் பிரிவில் இன்குலாப், எஸ்.என்.நாகராஜன், பாலு மகேந்திரா, டொமினிக் ஜீவா, எஸ்.பொன்னுத்துரை, முருகபூபதி, நீர்வை பொன்னையன், தேவகாந்தன், அகிலன் கண்ணன், அந்தனி ஜீவா, நந்தி, கே.எஸ்.சிவகுமாரன், அ.முஹம்மது சமீம், சிலோன் விஜயேந்திரன் ஆகியோரின் மலரும் நினைவுகள் இடம்பெற்றுள்ளன. ‘செ.க.பற்றி நண்பர்கள்’ என்ற மூன்றாம் பிரிவில் என்.ராம், பேராசிரியர் சி.தில்லைநாதன், பேராசிரியர் ந.தெய்வசுந்தரம், முனைவர் ந.அரணமுருவல், தம்பையா கயிலாயர், வெ.தங்கவேல்சாமி ஆகியோர் செ.கணேசலிங்கன் அவர்களுடனான தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். ‘செ.க.மறைவின்போது’ என்ற நான்காவது பிரிவில் மு.நித்தியானந்தன், வு.இராமகிருஷ்ணன், தி.ஞானசேகரன், தெளிவத்தை ஜோசப், உங்கள் நூலகம் ஆசிரியர், அமிர்தலிங்கம் பௌநந்தி, தினகரன் ஆசிரியர், வீ.பா.கணேசன், கி.வே.பொன்னையன், அக்னிபுத்திரன், ஆர்.விஜயசங்கர், பாவெல் தர்மபுரி, தேசிய விடுதலை இயக்கம், வி.ரி.இளங்கோவன், கல்லாறு சதீஷ், இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான், ஆ.பத்மாவதி, என்.ரமேஷ், ஆர்.கே.ராதாகிருஷ்ணன், வு.ராமகிருஷ்ணன் ஆகியோர் அமரர் செ.க. பற்றிய தமது கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளனர்.