மலர்க் குழு. கனடா: தமிழ்ஒளி வித்துவான் க.செபரத்தினம் நினைவுப் பணிமன்றம், 1வது பதிப்பு, நவம்பர் 2014. (கனடா: Fine Print).
(14), 222 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21.5 சமீ.
மூதறிஞர் தமிழ்ஒளி, வித்துவான் க.செபரத்தினம் அவர்களின் மறைவின் ஓராண்டு நினைவு விழாவும், நினைவுப் பேருரையும், பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் 01.11.2014 அன்று கனடாவில் இடம்பெற்ற வேளையில் இந்நினைவு மலரும் வெளியிடப்பட்டிருந்தது. உலகளாவிய ரீதியில் ஈழத்தமிழ் அறிஞர்களின் பார்வையில் வித்துவான் க.செபரத்தினம் அவர்களின் வாழ்வும் பணிகளும் இம்மலரில் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.