செ.யோகராஜா. மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரைக் குழு, மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம், 82, அரசாங்க விடுதி வீதி, கல்லடி, 1வது பதிப்பு, ஜுலை 2023. (மட்டக்களப்பு: துர்க்கா அச்சகம், கொக்குவில்).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
இப்பேருரையில் பேராசிரியர் செ.யோகராஜா அவர்கள் இரசனைமுறை விமர்சன வளர்ச்சியில், ஒப்பியல்முறை விமர்சன வளர்ச்சியில், பகுப்பு முறை விமர்சன வளர்ச்சியில், இந்திய விமர்சன மரபில், வரலாற்று முறை விமர்சன வளர்ச்சியில், கலைத்துறை விமர்சன வளர்ச்சியில், ஈழத்து விமர்சன வளர்ச்சியில் (1.தேசிய இலக்கியம் பற்றி, 2. இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கற்கைநெறியாக விமர்சனம்), புத்தகப் பண்பாடு பற்றிச் சிந்தித்த முன்னோடி, ஈழத்துப் புதுக்கவிதை முன்னோடி எனப் பல்பரிமாணங்களில் சுவாமி விபுலாநந்தர் பற்றிய தனது நினைவுப்பேருரையினை வழங்கியுள்ளார்.